ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளி வரும் - ஸ்டாலின்
திருச்சி: கே.என்.ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க திமுக தயார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கே.என். ராமஜெயம், கடந்த 2012 ஆம் வருடம் மார்ச் 29ஆம் தேதி அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், குற்றவாளிகளை கண்டறிவதில் போலீசார் மிகவும் தடுமாறி வருகின்றனர். இதனையடுத்து, கே.என்.ராமஜெயத்தின் மனைவி லதா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கே.என்.ராமஜெயம், கொலை செய்யப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் சிபிசிஐடி விசாரணையில் போதிய முன்னேற்றம் இல்லை.

மேலும், தனது கணவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால், அரசியல் காரணங்களுக்காக வழக்கை காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்திவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரினார். ஆனால், இந்த மனு விசாரணைக்கு வரும் போதெல்லாம், குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம், விசாரணை முடியும் தருவாயில் உள்ளது என கூறி காவல்துறையினர் கால அவகாசம் கேட்டு வந்தனர். ஆனால் இம்முறை நீதிமன்றம் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டது. சி.பி.ஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.
இதனிடையே திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரி, ஆரம்பத்திலிருந்தே தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார். சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் அவர் கூறினார். தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க திமுக தயார் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தருவது பற்றி தலைவர் கருணாநிதி தான் முடிவு செய்வார் என்று கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications