நெருங்கி வருகிறது தேமுதிக...கூட்டணிக்கு வாய்ப்புள்ளது: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!
உதகை: தேமுதிக நெருங்கி வருவதுபோல் தெரிகின்றது. கூட்டணிக்கும் வாய்ப்புள்ளது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குன்னூரில் நீலகிரி மாவட்ட திமுக சார்பில் 1367 மாணவர்களுக்கு ஓர் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது

தி.மு.க.வுடன் தே.மு.தி.க நெருங்கிவருவது போல் தெரிகிறது. கூட்டணி உருவாகுமானால் தேர்தல் நேரத்தில் கருணாநிதி அறிவிப்பார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேளாண்மை துறை அமைச்சராக இருந்த காலத்தில் நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மைத்துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.
வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு பதிலாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகால அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொலை,கொள்ளை மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி தமிழக ஆளுநரிடம் விரைவில் மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அது நீதிபதி குமாரசாமி கையில்தான் உள்ளது என்றார்.
முன்னதாக 1367 மாணவர்களுக்கு ஓர் ஆண்டு கல்வி கட்டணம் வழங்கியபின் அவர் பேசும்போது, "தமிழகத்தில் விரைவில் நல்லாட்சி மலரும் எனவும், திமுகவினர் பேச்சை குறைத்து உழைப்பை அதிகப்படுத்த வேண்டும் எனவும் அடுத்து தமிழகத்திற்கு நல்லது செய்யும் ஆட்சி அமையும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications