6வது முறையும் நானே முதல்வர்... எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வர்!: கருணாநிதி
சென்னை: நான் 6வதுமுறையாக முதல்வராக வேண்டும் என்று ஸ்டாலின்தான் விரும்புகிறார் என்று திமுக தலைவர் கருணாநிதி தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளார். ஸ்டாலினுக்கு முதல்வராக வேண்டும் என்று ஆசையில்லை என்று கூறிய கருணாநிதி, எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வராக முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பது அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினரின் விருப்பமாக உள்ளது. நமக்கு நாமே பயணத்தின் பிரச்சார பாடலில் கூட ஸ்டாலினை வாழ்த்தி, தலைவா... முதல்வா... என்ற வரிகள் அடங்கிய பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் மு.க. அழகிரியால் ஏதாவது பிரச்சினை வரும் என்பதால் அதற்கான வாய்ப்பை அவர் வழங்கவில்லை. இம்முறையும் தானே முதல்வர் வேட்பாளர் என்று கூறி படு சுறுசுறுப்பாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் கருணாநிதி.

கருணாநிதியின் பேட்டி
பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவே, என்டிடிவி ஆங்கில செய்தி சேனலுக்கு நேற்று கருணாநிதி பேட்டியளித்தார். அப்போது அவரிடம், " நீங்கள் உங்கள் கட்சியில் கடந்த பல ஆண்டுகளாக இளைஞர்களுக்கு ஊக்கமளித்து, பல இளைய தலைவர்களை வளர்த்துள்ளீர்கள். தற்போது உங்களுக்கு 93 வயதாகிறது. எனவே நீங்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என பலரும் சொல்கிறார்கள்.
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸும் நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என சொல்லி இருக்கிறார். இந்நிலையில் இந்த தேர்தலில் உங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றிய பின்னர் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவீர்களா...? குறிப்பாக ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என அவரது ஆதரவாளர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. உங்களது பதில் என்ன?" என செய்தியாளர் கேட்டார்.

6வது முறை முதல்வர்
அதற்கு பதிலளித்த கருணாநிதி, " ஸ்டாலினுக்கே முதல்வர் ஆக வேண்டும் என விருப்பம் இல்லை என்று கூறினார். திமுக தலைவர்தான் முதல்வராக வரவேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறார். நான் கடந்த 1957 ம் ஆண்டிலிருந்து இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில் தோற்றதே இல்லை. இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும், நான்தான் ஆறாவது முறையாகவும் முதல்வராக வரவேண்டும் என விரும்புகிறவர்களில் முதல் நபர் ஸ்டாலின் என்று கூறினார் கருணாநிதி.

எனக்கு ஏதாவது நேர்ந்தால்?
ஸ்டாலின் முதல்வராக ஆவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லும் அவரது ஆதரவாளர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, " அவர் முதல்வராவதற்கு வாய்ப்பு வரவேண்டுமென்றால் இயற்கை எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் உண்டு." என்று கூறினார். கருணாநிதி இந்த பதிலை சொல்லும் போது அவரது குரல் சற்றே தழு தழுத்தது.

பாராட்டிய கருணாநிதி
கடந்த சில தினங்களாகவே ஸ்டாலினை அதிகமாகவே பாராட்டி வருகிறார் கருணாநிதி. ஸ்டாலினை மகனாக பெற்றது தன்னுடைய தவப்பயன் என்று கூறினார். அதற்கு ஸ்டாலினும் ‘கருணாநிதியை தந்தையாக பெற்றது எனது தவப்பயன்' என்று உருகினார். இது ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த தேர்தலிலேயே ஸ்டாலினை முதல்வராக அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்றும் பேசப்பட்டது.
தெளிவுபடுத்திய கருணாநிதி
இந்த நிலையில் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வராக முடியும் என்று கருணாநிதி கூறியுள்ளது ஸ்டாலின் ஆதரவாளர்களிடையை ஒருவித அதிர்ச்சியையும், அழகிரி ஆதரவாளர்களிடையே ஒருவித மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்றே பேசப்படுகிறது.

நமக்கு நாமே பயணம்
மு.க.ஸ்டாலினை எம்.எல்.ஏவாகவும், மேயராகவும், அமைச்சராகவும், துணைமுதல்வராகவும் பதவியில் அமரவைத்து அழகு பார்த்தவர் கருணாநிதி. நமக்கு நாமே பயணம் செய்து ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்துள்ளார். இந்த பயணம் பலரது பாராட்டையும் பெற்றது.

ரியாக்சன் என்ன?
இம்முறை ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபற்றி மூச்சே விடவில்லை கருணாநிதி. ஒருவேளை சட்டசபை தேர்தலில் ஜெயித்தால் முதல்வராக ஸ்டாலின் அறிவிக்கப்படலாம் என்று பேசப்பட்ட நிலையில் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு தெளிவுபடுத்திவிட்டார் கருணாநிதி. இது ஸ்டாலின் ஆதரவாளர்களை சற்றே உற்சாகமிழக்கச் செய்துள்ளது என்றே கூற வேண்டும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications