மாட்டுத் தொழுவமாக மாறிய அரசுப் பள்ளி... கண்டு கொள்ளாத அதிகாரிகள்.. கலக்கத்தில் மாணவர்கள்
நெல்லை: நெல்லை அருகே சிறார் பள்ளியில் மாட்டை கட்டி தொழுவமாக மாற்றி வி்ட்டதால் சிறுவர்கள் கல்வி கற்க முடியாமல் தவித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
நெல்லை அருகே மானூர் யூனியன் பள்ளிக்கோட்டையில் ஊராட்சி ஓன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100க்கு்ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இது ஈராசிரியர் பள்ளியாகும். தலைமை ஆ்சிரியையும், உதவி ஆசிரியர் ஒருவரும் உள்ளனர்.
கிராமத்து பள்ளி என்பதால் கல்வி துறை அதிகாரிகளும், ஊராட்சி ஓன்றிய அதிகாரிகளும் இந்த பள்ளியை கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த பள்ளியில் சிலர் ஆடு, மாடுகளை கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சாணம் உள்ளிட்ட கழிவுகள் வகுப்பறை, வராண்டா உள்ளிட்ட இடங்களில் சிதறி கிடக்கிறது.
இரவு நேரங்களில் பள்ளிகள் அருகே ஆடுகளை அடைத்து வைப்பதால் தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் வகுப்பறையில் மாணவர்கள் உட்கார வழியின்றி மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஊர் தலைவர்களிடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. பள்ளியை ஆசிரியர்களே சுத்தம் செய்ய வைத்தாலும் நிலைமை மாறவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மாலை பள்ளி வாளகத்தில் திரண்டனர். தகவல் அறிந்த உதவி தொடக்க கல்வி அதிகாரி முத்துபிள்ளை, கல்வி துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்தனர். அவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியை உஷா, கால்நடைகளை இஙகு கட்டி வருவதால் தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் குழந்தைகள் பாடம் படிக்க முடியாமல் சிரமப்படுவதாக தெரிவித்தார். இதுகுறித்து யூனியன் அதிகாரிகளிடமும், கல்வி துறை உயர் அதிகாரிகளிடமும் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications