சொகுசு கார்களிலேயே 6 மாதங்கள் குடித்தனம் நடத்திய மதன்!
தலைமறைவான நாளிலிருந்து தொடர்ந்து விதவிதமான சொகுசு கார்களிலேயே வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார் வேந்தர் மூவீஸ் மதன்.
எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ 84 கோடியை சுருட்டியதாக மதன் மீது புகார் எழுந்தது. இந்தப் பணத்தை எஸ்ஆர்எம் பல்கலைக் கழக வேந்தர் பாரிவேந்தர் எனும் பச்சமுத்துவிடமே கொடுத்துவிட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார் மதன்.

கடந்த மே 27ம் தேதியிலிருந்து 6 மாதங்களாக அவரை போலீசார் தேடி வந்தனர்.
ஆரம்பத்தில் காசிக்குப் போன மதன் பின்னர் நேபாளம், மணிப்பூர் என பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கிறார். எல்லாம் விதவிதமான கார்களில்தான்.
இவருக்கு சென்னை மற்றும் ஆந்திராவிலிருந்து பணம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அவ்வப்போது சப்ளை செய்து வந்திருக்கிறார்கள், மதனுக்கு நெருக்கமானவர்கள்.
தன்னிடமிருந்த பணத்தில் மணிப்பூர் மாநிலத்தில் இரு பண்ணை வீடுகளையும் வாங்கியிருக்கிறார் மதன். அப்படி வாங்கிய விஷயத்தைப் போலீசார் மோப்பம் பிடித்துவிட்டதால்தான் சிக்கிக் கொண்டார்.
இந்த 6 மாத காலத்தில் ஒரு முறை சென்னை வந்து சென்றதாக போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம் மதன்.
வெளியில் தெரியாத தகவல், போலீசார் மதனை திருப்பூரில் கைது செய்யவில்லை. அவர் மணிப்பூரிலேயே கைது செய்யப்பட்டுவிட்டார். ஆனால் கிட்டத்தட்ட ஒரு வாரம் அவரை திருப்பூரில் வைத்து விசாரித்துள்ளனர் போலீசார். திருப்பூரில் மதனுக்கு நெருக்கமான பெண் வீட்டில் வைத்து இந்த விசாரணை நடந்ததாகக் கூறப்படுகிறது.
பண விவகாரத்தைப் பொறுத்தவரை தன்னிடம் எதுவுமே இல்லை. அனைத்தையும் பச்சமுத்துவிடம் ஒப்படைத்துவிட்டதாக மதன் கூறுகிறார். ஆனால் மதன் சொல்வது எதுவும் உண்மையில்லை என தெரிவித்துள்ள பச்சமுத்து, மாணவர்களிடம் மோசடி செய்யப்பட்ட ரூ 75 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தி ஜாமீனில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications