ஓபிஎஸ் அதிமுக ஆட்சி மன்ற குழு தலைவராக மதுசூதனன் தேர்வு- 13 உறுப்பினர்களும் அறிவிப்பு!
ஓபிஎஸ் அதிமுகவின் ஆட்சி மன்ற குழு தலைவராக மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 13 ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களும் அறிவிக்காப்பட்டுள்ளனர்.
சென்னை : ஓபிஎஸ் அணியின் ஆட்சி மன்ற குழு தலைவராக மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஓபிஎஸ், பொன்னையன், மைத்ரேயன், செம்மலை, பாண்டியராஜன் உள்ளிட்ட 13 பேர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டுள்ளது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தீபா அணி என்று மூன்றாக அதிமுக பிளவுபட்டுள்ளது.

அண்மையில் சசிகலா அதிமுகவின் ஆட்சி மன்ற குழு தலைவராக சிறையில் இருக்கும் சசிகலாவை நியமிப்பதாக துணைப் பொதுச்செயலர் தினகாரன் அறிவித்தார். ஆட்சிக் மன்றக் குழுவின் உறுப்பினர்களாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஓபிஎஸ் அதிமுக ஆட்சி மன்ற குழு தலைவராக மதுசூதனனை தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் ஆட்சிக் மன்றக் குழுவின் உறுப்பினர்களாக ஓ.பன்னீர்செல்வம், பொன்னையன், மைத்ரேயன், செம்மலை, பாண்டியராஜன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாணிக்கம், நீலங்கரை எம்.சி முனுசாமி, கோபாலகிருஷ்ணன், மருதராஜ், ஜெயசிங், செங்குட்டுவன், ஷேக் அயூப் ஆகிய 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆட்சி மன்ற குழு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி தரப்பில் போட்டியிடும் வேட்பாளராக யாரை நிறுத்துவது என முடிவு செய்யும்.
-
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா!












Click it and Unblock the Notifications