என்னாது ஜெயலலிதாவிற்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தது 'கோயபல்ஸ்' நடராஜனா?... மதுசூதனன் விளாசல்!
ஜெயலலிதாவிற்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தது தான் தான் என்று சொல்லும் கோயபல்ஸ் நடராஜன்,ஜெ. உயிருடன் இருந்த போது ஏன் அதனை சொல்லவில்லை என்று மதுசூதனன் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிஞ்சிப்பாடி : ஜெயலலிதாவிற்கு அரசியலில் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தது தான் தான் என்று சொல்லும் கோயபல்ஸ் நடராஜன்,ஜெ. உயிருடன் இருந்த போது ஏன் அதனை சொல்லவில்லை என்று மதுசூதனன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது : ஒரு சின்ன பையன் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் நான் தான் எல்லாம் சொல்லிக் கொடுத்தேன் என்று சொல்லி இருக்கிறார். யாருக்கு சொல்லிக் கொடுத்தார் என்று கூறி இருக்கிறார் தெரியுமா ஜெயலலிதாவிற்கு தான் தான் எல்லாமும் சொல்லிக் கொடுத்தேன் என்கிறார்.
கோயபல்ஸ் நடராஜன் தான் இப்படி பேசியுள்ளார். இவரே இன்னைக்கோ நாளைக்கோ போகிற மாதிரித் தான் இருக்கிறார். நான் எல்லாமே சொல்லிக் கொடுத்தேன், தமிழகத்திற்கான எல்லா திட்டங்களையும் தான் தான் வகுத்தக் கொடுத்ததாக சொல்கிறார்.

இப்போது ஏன் சொல்கிறார் நடராஜன்
இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறார், பதில் சொல்வதற்கு அவர்கள் இல்லை என்பதாலா? நான் அவரை கேட்கிறேன், நடராஜனுக்கு தாலி எடுத்துக் கொடுத்தது யார். அதிமுகவை வைத்து திமுகவை சேர்ந்தவர்களுக்குத் தான் நடராஜன் அனைத்தும் செய்து கொடுத்துள்ளார்.

ஜெ. வின் பணத்தை ஏமாற்றிய நடராஜன்
சேவல் சின்னத்தில் ஜெயலலிதா போட்டியிட்ட போது 41 லட்சம் ரூபாய் மிச்சம் பிடித்தார். அப்போது சசிகலாவிடம் ஜெயலலிதா அந்தப் பணம் எங்கே எனக் கேட்டார், அதற்கு சசிகலா நடராஜன் எடுத்துக் கொண்டு போய் நிலம் வாங்கி விட்டார் என்று சொன்னார்.

ஜெ. வின் கையால் அடி வாங்கியவர்
ஜெயலலிதா நேரடியாக சென்று நடராஜனை சந்தித்து கையில் கிடைத்த ஏதோ ஒன்றை வைத்து அடி அடி என்ற அடித்தார்கள். அன்றிலிருந்து நடராஜனுடன் யார் தொடர்பு வைத்தாலும் அவர்களை கட்டம் கட்டியவர் தான் ஜெயலலிதா.

பதில் சொல்ல யாரும் இல்லை என்பதாலா?
நடராஜனுக்கும் அதிமுகவிற்கும் என்ன தொடர்பு. எல்லாவற்றையும் மறைத்து இன்று நாடகமாடுகிறார், பதில் சொல்ல யாரும் இல்லை என்ற நினைப்பா. உன்னை அழிப்பதற்கு சாட்சியாகவே கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருக்கிறார் என்று மதுசூதனன் காட்டமாகச் சொன்னார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications