For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. தீர்ப்பை எதிர்த்து கண்டனத் தீர்மானம் போட சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் முடிவு

Google Oneindia Tamil News

Madras HC advocates association to condemn Jaya verdict
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிரான பெங்களூர் கோர்ட் தீர்ப்பைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பானது, காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழகத்துக்காக தீவிரமாக செயல்பட்ட காரணத்தால், ஜெயலலிதாவைப் பழிவாங்கும் வகையில் வெளியாகியுள்ளது என்றும் வக்கீல்கள் சங்கம் கூறுகிறது.

இந்த வாசகத்தை வைத்தே தீர்மானம் போடப்படவுள்ளதாகவும், சங்கக் கூட்டத்தைக் கூட்டி இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திரையுலகம், விவசாயிகள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் குதித்துள்ள நிலையில் தீர்ப்பைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கமும் களம் குதிக்கவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Sources say that Madras HC advocates association has decided to adopt a resolution against the Jaya verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X