நடிகர் சூர்யா உள்பட 8 நடிகர்களுக்கான பிடிவாரண்டுக்கு தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய வழக்கில், நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 பேர் மீதான பிடிவாரண்ட்டுக்கு சென்னை ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை: நடிகர்கள் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட 8 நடிகர்களுக்கான பிடிவாரண்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சேரன், சரத்குமார், விவேக், விஜயகுமார், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகிய 8 பேர் மீது நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால் 8 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்து நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. உதகையை சேர்ந்த பத்திரிகையாளர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதனை அடுத்து பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி 8 பேரும் உதகை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை உதகை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் உதகை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உடனடியாக 8 நடிகர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்யா,சத்யராஜ் உள்ளிட்ட 8 பேரின் மீதான பிடிவாரண்டுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications