உள்ளாட்சி இடைத் தேர்தலுக்குத் தடை இல்லை, நடத்தலாம்... உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
கோவையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கார்த்திகேயன். இவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், உள்ளாட்சி இடைத் தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 6ம் தேதி ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. அதில் செப்டம்பர் 28ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பை அன்று மாலையே திரும்பப் பெற்றுக் கொண்டது.

பிறகு, மீண்டும் அதே செப்டம்பர் 28ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று புதிய அறிவிக்கையை வெளியிட்டது. இதில் உள்நோக்கம் உள்ளது, கட்சிகளுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்படாமல், சட்டங்களை பின்பற்றாமலும் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதால் இந்த அறிவிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு மீது பதில் அளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் போதிய அவகாசம் தரப்பட்டுள்ளதாகவும், முறைப்படியே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாகவும் விளக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் தலைமையிலான முதன்மை பெஞ்ச் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications