படம் பிடிக்கா விட்டால் பார்க்காதீங்க - வழக்கு போட்டவரை மெர்சலாக்கிய நீதிபதி
Recommended Video

சென்னை: சினிமா படம் பிடிக்காவிட்டால் பார்க்கவேண்டாம் என்று மெர்சல் படத்திற்கு எதிராக வழக்கு போட்ட மனுதாரரை ஹைகோர்ட் நீதிபதி கூறியுள்ளார்.
விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரியும் அதற்கு வழங்கியுள்ள தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாள்களுக்கு முன்னர் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவில், இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான கருத்துகள் மெர்சல் திரைப்படத்தில் இருக்கின்றன. குறிப்பாக, மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள்குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரான வழக்கறிஞர் அஷ்வத்தாமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், இன்று இந்த வழக்கை விசாரித்தது.
வழக்கு விசாணை தொடங்கியதில் இருந்தே நீதிபதிகள் சராமாரியாக கேள்வி எழுப்பினர்.
•மெர்சல் படத்தில் என்ன குறையிருக்கிறது என்று கேட்ட நீதிபதிகள், இது வெறும் சினிமா மட்டும்தானே? வாழ்க்கையில்லை என்று கேட்டனர்.
•எத்தனையே குழந்தைகள் ஊட்டத்து குறைபாடு இன்றி இருக்கின்றனர். அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லையே.
•எத்தனையோ சினிமாவில் மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிக்கப்படுவதை எதிர்த்து வழக்கு போட்டீர்களா?.
•மது அருந்துவது, புகை பிடிப்பது தொடர்பான காட்சிகள் நிறைய வருகிறதே அதை எதிர்த்து வழக்கு போட்டிருக்கலாமே என்றும் கேட்டனர்.
•மெர்சல் திரைப்படம் வெறும் சினிமா மட்டும்தான். அது வாழ்க்கையில்லை. மக்களை பாதிக்கும் வசனங்கள என்ன இருக்கிறது?
•ஒருவேளை அந்தப் படத்தில் வரும் வசனங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படத்தை நீங்கள் பார்க்காதீர்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மெர்சல் படத்திற்கு எதிராக வழக்கு போட்டவரரையே நீதிபதி மெர்சலாக்கிவிட்டார் என்று நீதிமன்ற வளாகத்தில் விஜய் ரசிகர்கள் பேசிக்கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications