For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் மீது வழக்கு பதியலாம்... ஹைகோர்ட் உத்தரவு!

வன்முறையை தூண்டும் விதமாக பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிய ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: சோடா பாட்டில் வீசத்தெரியும் என்று பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று திருச்செங்கோடு காவல் ஆய்வாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல்லை சேர்ந்த வைரவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ஜனவரி 26ல் திருச்செங்கோடு கூட்டத்தில் ஆண்டாளை விமர்சிப்பவர்கள் மீது சோடா பாட்டில் வீச தெரியும் என்று ஜீயர் பேசியுள்ளார். கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய ஜீயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைரவேல் கோரிக்கை விடுத்திருந்தார்.

Madras Hc ordered to register case against Sadagoppa ramanuja jiyar

இந்த மனுவை கடந்த வாரத்தில் விசாரித்த நீதிபதி எம்எஸ் ரமேஷ், வைரவேல் மனுவிற்கு பிப்ரவரி 20க்குள் பதிலளிக்குமாறு கடந்த வாரத்தில் திருச்செங்கோடு காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது சோடா பாட்டில் வீசத் தெரியும் என்று பேசிய சடகோப ராமானுஜ ஜீயர் மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று திருச்செங்கோடு காவல்துறையினருக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து ஆண்டாளை தவறாக சித்தரித்து பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜர் எங்களுக்கும் சோடா பாட்டில், கல் வீசத் தெரியும் என்று பேசி இருந்தால் சடகோப ராமானுஜ ஜீயர் சர்ச்சையில் சிக்கினார்.

English summary
Madras highcourt ordered to Thiruchengodu police to file case against srivilliputhur Ramanuja Jiyar for his speech over raising violence among society.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X