ஹெல்மெட் போடாத வக்கீல்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு முறையாக கடைப்பிடிக்கிறதா. வக்கீல்கள் ஹெல்மெட் போடாமல் போவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எத்தனை வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தைத் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 1ம் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டம் தீவிரமாக அமலாக்கப்பட்டு வருகிறது. ஆனால் வக்கீல்கள் பலர் தாங்கள் வக்கீல்கள் என்று கூறி ஹெல்மெட் போடாமல் போவதும், கேட்டால் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் புகார்கள் வருகின்றன.

மேலும் மதுரையில் வக்கீல்கள் ஹெல்மெட் போடாமல் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலம் போன கதையும் நடந்தது. அப்பாவி பொதுமக்களே சட்டத்தை மதித்து ஹெல்மெட் அணிய ஆரம்பித்து விட்ட நிலையில் சட்டத்தை காக்கும் பொறுப்பில் உள்ள வக்கீல்கள் இதுபோல நடப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கட்டாய ஹெல்மெட் தொடர்பான வழக்கு, இந்த வழக்கில் ஏற்கனவே அதிரடி உத்தரவிட்டிருந்த நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியனிடம், கட்டாய ஹெல்மெட் திட்டத்தை தமிழக அரசு எந்த அளவுக்கு அமல்படுத்தி வருகிறது. ஹெல்மெட் போடாமல் போகும் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.
அதற்கு அரவிந்த் பாண்டியன், திங்கள்கிழமை இந்த விவரத்தைத் தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications