அம்பேத்கர் சிலைக்கு காவி உடை அணிவிக்கமாட்டோம்..சென்னை ஹைகோர்ட்டில் அர்ஜூன் சம்பத் மீண்டும் உறுதிமொழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளன்று சென்னை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இந்து மக்கள் கட்சிக்கு நிபந்தனையுடன் அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி அளிக்க பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தினருக்கு உத்தரவிடக் கோரி இந்து மக்கள் கட்சியின் சென்னை வடக்கு மண்டல வழக்கறிஞர் பிரிவு தலைவரான ஏ.அருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Madras High Court grants conditional permission to IMK to garland Ambedkar statue

இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த காலங்களில் மனுதாரர் கட்சியினர் மாலை அணிவிக்க சென்றபோது சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த முறை அளித்த உத்தரவாதத்தை போல மீண்டும் தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்து மக்கள் கட்சி சார்பில், பிறரை பற்றி கோஷங்கள் எழுப்ப மாட்டோம், வாத்தியங்கள் ஏதும் வாசிக்க மாட்டோம், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம், அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, சந்தனபொட்டு, விபூதி, குங்குமம் போன்றவற்றை அணிவிக்க மாட்டோம், காவல்துறை வாகனத்தில் சென்று வருவோம் என உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுந்தர் மோகன், ஏப்ர்ல 14ம் தேதி மாலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 9 நபர்கள் மட்டும், காவல்துறை வாகனத்தில் சென்று மாலை 4 மணிக்கு மேல் 4:30 மணிக்குள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Madras High Court grants conditional permission to IMK to garland Ambedkar statue

டிசம்பர் 6-ல் நடந்தது என்ன?: அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு காவி உடை, விபூதி, குங்குமம் பூசிய அம்பேத்கர் படத்தை அச்சிட்டு கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் அர்ஜூன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சியினர் ஒட்டியிருந்தனர். இது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையானது. இச்சம்பவம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி நிர்வாகி குருமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். அதேநேரத்தில் சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த செல்லும் தமக்கு பாதுகாப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அர்ஜூன் சம்பத் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, விபூதி, குங்குமம் பூச மாட்டோம் என எழுத்துப்பூர்வமான உறுதி மொழி அளிக்க உத்தரவிட்டது. இதனடிப்படையில் அர்ஜூன் சம்பத் சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக எழுதித் தந்தார். இதன்பின்னர் சென்னை அம்பேத்கர் மணிமண்டபம் சென்ற அர்ஜூன் சம்பத்துக்கு விசிக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தள்ளு முள்ளு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+