அதிமுக நிர்வாகி கொலையில் திமுக முக்கிய நிர்வாகி நள்ளிரவில் கைது
மதுரை: மதுரை அதிமுக நிர்வாகி மயில் முருகன் கொலை வழக்கில் திமுக மாஜி மண்டல தலைவர் வி.கே. குருசாமி கைது செய்யப்பட்டார்.
மதுரை மாநகர் 72வது வட்ட அதிமுக செயலாளர் மயில் முருகன் நேற்று காலை தன்னுடைய அலுவலகம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல முன்னாள் தலைவர் வி.கே. குருசாமி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் அலெக்ஸ் பாண்டியன், மாதவன், சடையாண்டி, மாடு மணியன் என்ற மணிகண்டன், முத்துராமலிங்கம் ஆகிய ஐந்து பேர் சிவகங்கை ஜே.எம். நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்தனர். அவர்களை வரும் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அந்த 5 பேரும் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கிடையே நெஞ்சுலி காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குருசாமி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு இன்று காலை மதுரை மாவட்ட ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 23ம் தேதி தான் குருசாமியின் தங்கை கணவர் கஜேந்திர பாண்டி(40) 3 பேர் கொண்ட கும்பலால் மதுரையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications