ஜல்லிக்கட்டு போராட்டம்: திரண்டு வரும் இளைஞர் படை- அலங்காநல்லூர் பஸ் சேவை நிறுத்தம்!
மதுரையில் இருந்து அலங்காநல்லூர், பாலமேடு செல்லும் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மதுரை: ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் மதுரையில் இருந்து அலங்காநல்லூர், பாலமேடு செல்லும் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அலங்காநல்லூர் பகுதிக்குள் மேலும் வெளியாட்கள் நுழையாமல் தடுக்க காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் நேற்று இரவு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட 240 பேரை, போலீசார் இன்று காலை கைது செய்தனர். இதனால் தமிழகம் முழுக்க போராட்டம் பரவியது. கல்லூரி மாணவ, மாணவிகள் வீதிக்கு இறங்கி வந்து போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி அலங்காநல்லூரில் கிராம மக்கள், பெண்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் அலங்காநல்லூரில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் என பலரும் திரண்டு ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி, அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடுக்கு தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் போராட்டம் காரணமாக அலங்காநல்லூர் நுழைவு வாயிலை காவல்துறையினர் மூடினர். அலங்காநல்லூர் பகுதிக்குள் மேலும் வெளியாட்கள் நுழையாமல் தடுக்க காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். தனிச்சியம், சிக்கந்தர்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பு வேலி அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications