மதுரை சித்திரை திருவிழா : தங்கப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் வீதியுலா - வீடியோ
மதுரை சித்திரை திருவிழாவின் 4ஆ ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு, மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 28ஆம் தேரி கொடியேற்றத்துடன் துவங்கியது. 4ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு, மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டனர்.
தெற்கு வாசல், சின்னக்கடைத்தெரு வழியாக வில்லாபுரத்தில் உள்ள பாவக்காய் மண்டபத்திற்கு சென்றனர். அங்கு பக்தர்கள் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரரை வழிபட்டனர்.

வில்லாபுரம் கண்மாய் பகுதியில் அக்காலத்தில் பாகற்காய் தோட்டம் இருந்துள்ளது. விவசாயிகளுக்கு தரிசனம் கொடுக்கவும், அப்பகுதி மக்கள் விழா எடுப்பதற்காகவும், பாவக்காய் மண்டபத்தில் அம்மனும், சுவாமியும் எழுந்தருள்வது வழக்கம்.
பாவக்காய் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், மாலை 6 மணிக்கு வில்லாபுரத்தில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு சுவாமி, அம்மன் கோயிலுக்கு வந்தனர்.












Click it and Unblock the Notifications