மதுரை கலெக்டர், வட்டாட்சியருக்கு 6 வார உரிமையியல் சிறை.. நீதிபதி சுரேஷ் உத்தரவு
மதுரை கலெக்டர் மற்றும் வட்டாட்சியருக்கு 6 வார கால உரிமையியல் சிறை விதித்து நீதிபதி சுரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை: 2 ஆண்டுகளாக தனிப்பட்டா வழங்காத வழக்கில் மதுரை மாவட்ட கலெக்டருக்கு 6 வாரம் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்டா வழங்குவது தொடர்பான வழக்கு மேலூர் உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், 2 ஆண்டுகளாக தனிப்பட்டா வழங்காத மதுரை கலெக்டருக்கு 6 வாரம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இதேபோன்று வட்டாட்சியருக்கும் 6 வாரகால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், கலெக்டரின் அலுவலக வாகனத்தை ஜப்தி செய்யவும் மேலூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞர், தண்டனையை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து, தனிப்பட்டா வழங்காத வழக்கில் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் மேலூர் வட்டாட்சியருக்கு விதிக்கப்பட்ட 6 வாரம் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications