காளைக்கு 2க்கு மேல்... வீரர்களுக்கு 18க்கு மேல் வயது வரம்பு- மதுரை கலெக்டர் உத்தரவு
மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்க மாடுகளுக்கு 2 வயதுக்கு மேல் ஆகியிருக்க வேண்டியது அவசியம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
வாடிவாசல், பார்வையாளர்கள் மாடம் உள்ளிட்டவற்றிற்கு வர்ணம் பூசும் பணிகளும், பந்தல் தோரணங்கள் அமைக்கும் பணிகளிலும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதை ஒட்டி அங்கும் வேகமாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள வாடிவாசல் பகுதியில் நடைபெறும் பணிகளை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் 15 ஆம்தேதி அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும்,17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று கூறினார்.
ஜல்லிக்கட்டு 8 மணிக்கு துவங்கி 2 மணிக்கு முடியும் என்றும், இரண்டரை வயது பூர்த்தியான காளைகள் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கபடும் என்றும் கூறினார். மேலும் 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவார்கள் என கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications