ஜல்லிக்கட்டு காளையின் வாலை பிடித்தால் வெளியேற்றம்... கலெக்டர் எச்சரிக்கை
ஜல்லிக்கட்டு காளையின் வாலை பிடித்தால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று மதுரை கலெக்டர் வீரராகவராவ் எச்சரித்துள்ளார்.
அவனியாபுரம்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் காளைகளின் வாலை பிடிக்கக் கூடாது என்றும் அப்படி செய்பவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் எச்சரித்துள்ளார்.
அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் இடத்தில் செய்தியாளர்களிடம் கலெக்டர் மேலும் கூறியதாவது:

மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளை என அனைவருக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 8 ஆம்புலன்ஸ், 5 தீயணைப்பு வாகனங்கள் அவசரகால உதவிக்காக வைக்கப்பட்டுள்ளன.
காலையில் 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டில் பங்கேற்க 919 மாடுகள் பதிவு செய்யப்பட்டது. 470 மாடுகள் கட்டவிழ்த்துவிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. அதிக பட்சமாக இன்று மாலை 4 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டி முடிவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மாநகர கமிஷனர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எல்ஈடி டிவிக்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. விதிகளுக்கு உட்பட்ட வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. கால்நடைக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதிப்பில்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்று கலெக்டர் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது, மாட்டின் வாலைப் பிடித்தவர்கள், கொம்பைப் பிடித்தவர்கள் உடனடியாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications