அழகிரியை புறக்கணித்து மதுரையில் திமுக நிகழ்ச்சிகள்... ஆதரவாளர்கள் கொந்தளிப்பு!
மதுரை: திமுக தென்மண்டல செயலர் மு.க. அழகிரியை புறக்கணித்துவிட்டு மதுரையில் திமுக நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து போயிருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்து அண்மையில் மு.க. அழகிரி தமிழகம் திரும்பினார். அவர் திரும்பிய நேரத்தில்தான் ஏற்காடு தேர்தல் பரபரத்துக் கொண்டிருக்கிறது.
பின்னர் அவர் மதுரையிலேயே முகாமிட்டிருக்கிறார். இருப்பினும் மதுரையில் திமுகவில் நடைபெறும் சம்பவங்களால் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் கடும் கொந்தளிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

பொன்.முத்து விவகாரம்
ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தல் பொறுப்பாளராக மதுரையைச் சேர்ந்த பொன். முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டிருப்பது அழகிரிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் முதல் எரிச்சலாம்.. தம்மை சீண்டவே பொன்.முத்துவை ஸ்டாலின் நியமித்திருக்கிறார் என்கிறாராம் அழகிரி.

மகளிர் அணி பயிற்சி முகாம்
அதேபோல் அழகிரி மதுரையில் இருக்கும்போதே திமுக மகளிர் அணி பயிற்சி முகாம் நடந்துள்ளது. தென்மண்டலத்தைச் சேர்ந்த 170 பேர் இதில் கலந்து கொண்டனர். ஆனால் அழகிரியின் பெயரோ எந்த சுவரொட்டியிலும் இல்லை.

சுபவீ, அருள் மொழி
இந்த கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீயும் திக வழக்கறிஞர் அருள்மொழியும் கலந்து கொண்டு பேசியிருக்கின்றனர்.

கூரியரில் அழைப்பு
மதுரையில் இருந்த அழகிரிக்கு கூரியரில் அழைப்பு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இது இன்னமும் உச்சகட்ட கோபத்தை அழகிரி ஆதரவாளர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. உடனே ஆதரவாளர்கள் அழகிரியிடம் போய் குமுற கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications