தூத்துக்குடி: போலீஸ், தலைமை செயலாளர் மீது வழக்கு பதிவு?.. அரசு பதில் அளிக்க வேண்டும்: ஹைகோர்ட்
துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்கள், தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி மீது கொலை வழக்கு பதிய கோரிய வழக்கில் தமிழக அரசு நாளை மறுநாள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித
மதுரை: தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்கள், தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி மீது கொலை வழக்கு பதிய கோரிய வழக்கில் தமிழக அரசு நாளை மறுநாள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த கொடூரமான காப்பர் ஆலையான ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர். இதில் கடந்த வாரம் செவ்வாய் கிழமை நடந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

இந்த மோசமான செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர். இன்னும் 30 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காணாமல் போன பலர் இன்னும் வீடு வந்து சேரவில்லை.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் மீது கொலை வழக்கு பதியக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதேபோல் நிவாரண தொகையும் அதிகப்படுத்த கோரி மனுவில் கூறப்பட்டது.
தற்போது துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்கள், தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி மீது கொலை வழக்கு பதிய கோரிய வழக்கில் தமிழக அரசு நாளை மறுநாள் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.10 லட்சம் வழங்குவது குறித்து தமிழக அரசு இரண்டு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications