மணல் குவாரிகளை மூடுவதற்கு தடை கோரிய வழக்கு : தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மணல் குவாரிகளை மூடுவதற்கான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மதுரை : தமிழகத்தில் இயங்கி வரும் மணல் குவாரிகளுக்கு தடை கோரிய வழக்கில், மதுரை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மணலை எடுத்துச் செல்லவும், விற்பனை செய்யவும் அனுமதி கோரி புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கில், தமிழகத்தில் இயங்கும் அனைத்து மணல் குவாரிகளையும் ஆறு மாதத்தில் மூட வேண்டும் என்றும், புதிய குவாரிகளுக்கு இனி அனுமதி வழங்க கூடாது என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி கடந்த மாதம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை குறித்து வாதிட்டார்.
இந்த வழக்கில் எதிர் மனுதாரரான ராமையா தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்து உத்தரவிட்டு உள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications