பேராசிரியை ஜெனிபாவிற்கு 15 இடங்களில் கத்திகுத்து... சதிகாரனின் பரபர பின்னணி!
பேராசிரியர் ஜெனிபாவிற்கு 15 இடங்களில் கத்திக்குத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் துணைவேந்தர் செல்லத்துரை கூறியுள்ளார்.
Recommended Video

மதுரை : வேலை கேட்டு தொல்லை செய்த ஜோதி முருகன் பேராசிரியை ஜெனிபாவை 15 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளதாகவும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் துணைவேந்தர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார் பேராசிரியர் ஜெனிஃபா. இவர் இன்று காலையில் தன்னுடைய அலுவலகத்தில் இருந்த போது, முன்னாள் பேராசிரியரும் ஆராய்ச்சிப் படிப்பு மாணவருமான ஜோதி முருகன் ஜெனிஃபாவின் அறைக்கு வந்துள்ளார்.
அவரிடம் தன்னை பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு ஜோதிமுருகன் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் சரிவர பணியாற்றாததாலேயே பணி நீக்கம் செய்யப்பட்டதால் சேர்த்துக் கொள்ள முடியாது என்று ஜெனிபா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமுருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெனிபாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில்
இதில் ஜெனிபாவின் அலறல் சத்தம் கேட்டு மாணவர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். இந்த கத்திக்குத்து சம்பவத்தால் அவருடைய அறையில் ரத்த வெள்ளமாக இருந்துள்ளது. இதனையடுத்து மாணவர்கள் ஜோதிமுருகனை சிறைபிடித்து வைத்து போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர்.

பொய் சொல்லி திருமணம்
இதனையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஜோதி முருகன் தான் கல்லூரியில் பணியாற்றுவதாகக் கூறி திருமணம் செய்துள்ளார். ஆனால் இப்போது பெண் வீட்டார் அது பற்றி கேட்கத் தொடங்கிவிட்டதால் ஜெனிபாவிடம் மீண்டும் பணி கேட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. ஜோதிமுருகன் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்
இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ஜோதி முருகன் பணியில் இருந்து நீக்கப்பட்ட முன்விரோதத்தால் ஜெனிபாவை தாக்கியுள்ளார். பல்கலைக்கழகத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளதால் மாணவர்கள் பேராசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

15 இடங்களில் கத்திக்குத்து
பேராசிரியர் ஜெனிபாவிற்கு 15 இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜோதிமுருகன் வந்து பணி கேட்டு தொந்தரவு செய்தது இப்போது தான் எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications