2 வருடத்திற்கு முன்பு திமுக.. பிறகு மதிமுக... தற்போது மீண்டும் திமுகவில் இணைந்தார் டாக்டர் சரவணன் !
சென்னை: மதிமுகவில் இருந்து விலகிய மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்து வரும் நிலையில் டாக்டர் சரவணன் மீண்டும் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக விலகி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டு கட்சி பணியாற்றி வருகின்றனர். சட்டசபை தேர்தலில் திமுக உடன் கூட்டணி என்று கூறிவிட்டு திடீரென கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியதுதான் இதற்கு காரணம் என பெரும்பாலனோர் கூறிவருகின்றனர்.

இதனிடையே மதிமுகவில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லைசெல்வம், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பெருமாள், புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் ஆகிய நால்வரும் சென்னையில் நேற்று முன்தினம் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர்.
இந்நிலையில் மதிமுக புறநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர் டாக்டர் சரவணன். அதற்கு முன்பு திமுகவில் இருந்தார். பின்னர் அந்தக் கட்சியில் இருந்து விலகி மதிமுகவில் இணைந்தார். மதிமுகவின் கொள்கை கோட்பாடுகளை கற்று புரிந்துகொள்வதற்குள் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் சிறிது காலம் பணியாற்றி வந்த சரவணன், தற்போது பாஜகவில் இருந்து விலகி திமுகவில் அக்கட்சி தலைவர் கருணாநிதி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுன் இன்று இணைந்தார். இந்நிகழ்வில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சேலம், கரூர், மதுரை புறநகர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் மதிமுகவில் இருந்து கூண்டோடு விலகி திமுகவில் இணைந்துள்ளனர். தொடர்ந்து மதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருவதால் மதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications