மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மலேசியாவில் இருந்து ரூ.86 லட்சம் மதிப்பில் லக்கேஜ் ஸ்கேனர்கள்

Subscribe to Oneindia Tamil

Madurai Meenakshi Amman temple gets Rs. 86 lakh worth luggage scanners
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பொருட்களை பரிசோதிக்க ரூ.86 லட்சம் செலவில் மலேசியாவில் இருந்து லக்கேஜ் ஸ்கேனர் கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம், மற்றும் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு தினமும் 75,000 முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை வருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வேறு இருந்து வருகிறது.

இதனால் கோவிலின் 4 கோபுர வாசல்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பொருட்களை சோதனை செய்ய ஸ்கேனர்கள் வாங்குவது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

இதையடுத்து ரூ.86 லட்சம் மதிப்புள்ள 5 அதிநவீன லக்கேஜ் ஸ்கேனர்கள் மலேசியாவில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கேனர்கள் கிழக்கு அம்மன் சன்னதி, கிழக்கு சுவாமி சன்னதி கோபுரம், மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய கோபுரங்கள் முன்பு பொருத்தப்பட உள்ளன.

பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தற்போது பொருட்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+