தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி - அலங்காநல்லூர் அருகே சீமான் கைது!
மதுரை: உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக மதுரை அலங்காநல்லூர் அருகே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்தத் தடையை பற்றி கவலைப்படாமல் தமிழகத்தில் பல இடங்களில் பல்வேறு பெயர்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக நூற்றுக்கணக்கானோர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே மதுரை பாலமேட்டில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இதற்காக அவர் மதுரை வந்து ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.
இந்நிலையில் பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்த ஏற்பாடு செய்ததாக நாம் தமிழர் கட்சியின் 20 பேரை போலீசார் இன்று காலையில் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூர் பூதக்குடி அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த சென்ற சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியினர் பலரும் கைது செய்யப்பட்டனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications