2 கல்யாணம்.. ஒரு கள்ளக்காதலி.. குஜாலாக வாழ்க்கை நடத்தி சிக்கிய பிடி ஆசிரியர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் 2 கல்யாணம் மற்றும் ஒரு கள்ளகாதல் விவகாரத்தில் சிக்கி தற்போது போலீஸிடம் மாட்டி கம்பி எண்ணி வருகிறார்.

மதுரை கூடல் நகரைச் சேர்ந்தவர் 32 வயதான கார்த்திகேயன். இவர் ஒரு தனியாயர் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறார். இவர் மீது திண்டுக்கல்லைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் எனது கணவருக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகியுள்ளது. இன்னொரு பெண்ணுடனும் தொடர்பு உள்ளது என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் போட்டு கைது செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையின்போது பரபரப்புத் தகவல்கள் அவர்களுக்குக் கிடைத்தன.

முதல் கல்யாணம் விவாகரத்து

முதல் கல்யாணம் விவாகரத்து

முதலில் கார்த்திகேயனின் பெற்றோர் அவருக்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளனர். அப்பெண் மன நலம் பாதிக்கப்பட்டதால் விவாகரத்து பெற்றுள்ளனர்.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

அடுத்த சரளா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது கார்த்திகேயனுக்கு. இந்த சரளா, வேறு யாருமல்ல, கார்த்திகேயனின் முன்னாள் தோழி ஆவார். அவரும் திருமணமாகி விவாகரத்து ஆனவராம். ஒரு மகன் வேறு உள்ளான்.

மீண்டும் கல்யாணம்

மீண்டும் கல்யாணம்

இந்த விவகாரம் கார்த்திகேயன் பெற்றோருக்குத் தெரிய வரவே அவர்கள் கண்டித்து காளீஸ்வரியைத் திருமணம் செய்து வைத்துள்ளனர். கல்யாணத்தன்றுதான் சரளா வந்து தகராறு செய்துள்ளார். இதனால் காளீஸ்வரி குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. அதன் பிறகுதான் போலீஸிடம் போனார் காளீஸ்வரி.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இதையடுத்து மதுரை தல்லாகுளம் போலீஸார் கார்த்திகேயனை அழைத்து நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A physical education teacher has tried to marry a second girl. On knowing this, his paramour complaint in Thallakulam Police. They arrested him.
Please Wait while comments are loading...