மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்... இடி மின்னலுடன்.. மகா மகிழ்ச்சியில் மாமதுரை!
மதுரை: மதுரை மாவட்டத்தில் இடியும் மின்னலுமாய் கொட்டிய கனமழையால் குளுமை பரவியுள்ளது. சித்திரை திருவிழா தொடங்க உள்ள நேரத்தில் பெய்து வரும் மழையால் உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் மார்ச் மாதம் முதலே கடும் வெப்பம் சுட்டெரித்தது. இந்த நிலையில், கடந்த 2 வார காலமாக கோடை மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் மழை கொட்டிய நிலையில் இன்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 2 மணியளவில் குளிர்ந்த காற்று வீசிய நிலையில் தூறலாக தொடங்கி இடியும் மின்னலுமாய் கனமழை பெய்தது. சுமார் இரண்டு மணிநேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல மதுரையின் புறநகர் பகுதிகளிலும், திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிகளிலும் மழை பெய்து குளுமை பரவியது. இதனால் உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மழை நீடிக்கும்
இதனிடையே தமிழகம், புதுவையில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமையும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை நிலவரம்
ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேர நிலவரப்படி பெரியகுளத்தில் 50 மி.மீ. மழையும் வால்பாறையில் 40 மி.மீ. மழையும் பெய்துள்ளது. குந்தா பாலம் (30 மி.மீ.), சின்னக்கல்லாறு, ஆண்டிப்பட்டி, சூளகிரி (20 மி.மீ.), ராஜாபாளையம் (10 மி.மீ.) ஆகிய இடங்களிலும் மழை பெய்துள்ளது.

பயிர்கள் சேதம்
இதனிடையே தமிழகத்தில் பெய்துவரும் கோடை மழையால் தென் பகுதியில் 2 கோடிக்கு ரூபாய் மேல் பயிர்கள் நாசமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தேனியில் அதிகபட்சமாக சுமார் 8 மணி வரை மழை பெய்தது. இந்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பல லட்சம் சேதம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியான ஆண்டியமேடு மற்றும் பேட்டை, ரிஷபம் ஆகிய பகுதிகளில் சுமார் 31 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கொடிக்கால் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு வேரோடு சாய்ந்து சேதமானது. சேத மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications