இரட்டை மின்கம்பத்தை ‘இரட்டை இலை’ போல பயன்படுத்தவில்லை.. தேர்தல் ஆணையத்திடம் மதுசூதனன் பதில் மனு
இரட்டை மின்கம்பம் சின்னத்தை இரட்டை இலை போன்று பயன்படுத்தவில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் மதுசூதனன் சார்பில் மனோஜ்பாண்டியன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: அதிமுக சின்னத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக அதிமுக புரட்சிதலைவி அம்மா கட்சியின் மதுசூதனன், அதிமுக அம்மா கட்சியின் தினகரன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதில் மனுவை மதுசூதனன் சார்பில் இன்று சென்னையில் தேர்தல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. இதையொட்டி தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளியாயின. அவருக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இரட்டை இலைக்கு தடை
இந்நிலையில், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகள், தனித்தனி பெயரில் போட்டியிடுவதால், அவர்கள் அதிமுகவின் கட்சி பெயரையோ இரட்டை இலை சின்னத்தையோ பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இருப்பினும் விதிகளை மீறி ஒரு சில பகுதிகளில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவதாக புகார் வந்தது.

சின்னத்தை தவறாக..
அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனின் சமூக வலைத்தளத்தில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் வந்ததையடுத்து அவரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு தினகரன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனும் அதிமுக பெயரை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.

மீண்டும் நோட்டீஸ்
இதையடுத்து, இரட்டை இலை சின்னம் மற்றும் கொடியை தவறாக பயன்படுத்தியதாக தினகரன், மதுசூதனன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் இன்று மாலை 4 மணிக்குள் இருவரும் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மதுசூதனன் பதில் மனு
இந்நிலையில், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியின் வேட்பாளர் மதுசூதனன் சார்பில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சென்னையில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள பதிலில், இரட்டை இலை சின்னத்தை பிரச்சாரத்தில் தவறாக பயன்படுத்தவில்லை என்றும் இரட்டை மின்கம்பத்தை இரட்டை இலை போல் பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications