சீக்கிரம் இணைங்க.. இல்லாட்டி தாவிருவோம்.. ஓபிஎஸ்ஸை நெருக்கும் தலைவர்கள்!
அணிகளை சீக்கிரம் இணைங்க இல்லாட்டி அந்தப்பக்கம் போயிருவோம் என்று ஒபிஎஸ்சிடம் அவரது அணி தலைவர்கள் நெருக்க ஆரம்பித்துள்ளனராம்.
சென்னை: ஆறுகுட்டி எம்எல்ஏ அணி தாவிய பிறகு ஓபிஎஸ் அணியில் இருந்து பலரும் ஈபிஎஸ் பக்கம் தயாராகி வருகிறார்களாம். அணிகளை சீக்கிரம் இணைங்க என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரடியாகவே ஓ.பன்னீர் செல்வத்திடம் பேசியிருக்கிறாராம்.
அணிகளை இணைக்கா விட்டால் அந்தப்பக்கம் போக பலரும் தயாராக இருக்கின்றனர் என்று ஓபிஎஸ்சிடம் கூறியிருக்கிறாராம் பாண்டியராஜன்.
ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கி வருகின்றனர் ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த அமைச்சர்கள். முதல் விக்கெட்டாக கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ஆறுகுட்டி எம்எல்ஏதான் அணி மாறினார். மேலும் சிலரை தங்கள் வசம் இழுத்து ஓபிஎஸ் அணியை வலுவிழக்கச் செய்யவேண்டும் என்று ஈபிஎஸ் அணியினர் முயற்சி செய்கின்றனர்.
இதனால் கோபமடைந்த ஓபிஎஸ், தனது குமுறலை டெல்லியில் பாஜக தலைவர்களிடம் கொட்டினாராம். என்னோடு இருக்கிறவங்க எல்லாம் தானாக வந்தவங்க. நான் யாரையும் என் பக்கம் வாங்கன்னு கூப்பிடவே இல்லை. இப்போ என் பக்கம் வந்தவங்க எல்லோரையும் பணம் கொடுத்து அங்கே இழுக்கிறார்கள்.

குமுறும் ஓபிஎஸ்
ஆறுகுட்டிக்கு என்ன விலை பேசி கூப்பிட்டாங்கன்னு எனக்கு தெரியும் என்று கூறினாராம் ஒபிஎஸ். இதுவரைக்கும் ஆட்சிக்கு நான் எந்த சிக்கலையும் உண்டாக்காம இருந்தேன். இப்போ அவர்கள் செய்யுறதுக்கு எல்லாம் நான் அமைதியாவே இருந்தால் எல்லாரையும் அந்தப்பக்கம் இழுத்துக்கொள்வார்கள். பதிலுக்கு நானும் செய்யட்டுமா என்று கேட்டாராம்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் கொடுத்த 60 நாட்கள் கெடு முடிய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. ஆகஸ்ட் 6 முதல் அவரும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருவார் என்று கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் அணிகளை சீக்கிரம் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓபிஎஸ் அணியில் உள்ளவர்களிடையே எழுந்துள்ளது.

மாஃபா பாண்டியராஜன்
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓபிஎஸ் அணிக்கு வந்த மாஃபா பாண்டியராஜன்தான் கடும் அதிருப்தியில் இருக்கிறார். அணிகளை சீக்கிரம் இணைக்காவிட்டால் தான் அணி மாறப்போவதாக நேரடியாகவே அவர் கூறியிருக்கிறாராம்.
Recommended Video


என்ன செய்வார் ஒபிஎஸ்
மதுசூதனன் கூட அணிகளை இணைக்கத்தான் ஆசைப்படுகிறாராம். ஆனால் கட்சியில் உள்ள சில மாஜி அமைச்சர்கள்தான் இணைப்பு பணிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்களாம். அணியை இணைப்பது ஓபிஎஸ் கையில்தான் இருக்கிறது. என்ன செய்யப்போகிறார் என்பது என்பதே அவரை நம்பி சென்றவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications