Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“விஜய் ரசிகர்களின் உயிரை பணயம் வைத்து அரசியல் செய்யக்கூடாது” - மகாவிஷ்ணு ரிட்டர்ன்ஸ்.. பரபர பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் கரூரில் 41 பேர் உயிரிழந்த பொழுது ஹீரோ போன்று களத்தில் நின்று பணியாற்றி இருக்க வேண்டும், ரசிகர்களின் உயிரை பணயம் வைத்து தவெக தலைவர் விஜய் அரசியல் செய்யக்கூடாது என்றும் பரம்பொருள் பவுண்டேஷன் தலைவர் மகாவிஷ்ணு பேசியுள்ளார்.

சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான மகா விஷ்ணு, திருப்பூரில் தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்தார். அதன்பிறகு பொதுவெளியில் பெரிதாக முகம் காட்டவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தவெக விஜய் பற்றி பரம்பொருள் பவுண்டேஷன் தலைவர் மகாவிஷ்ணு பேட்டி அளித்துள்ளார்.

Mahavishnu Slams Vijay Says Be a Real Hero Not Risk Fans Lives for Politics

மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே பொய்கைக்கரைப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பரம்பொருள் மகாவிஷ்ணு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "திருப்பரங்குன்றத்தில் உள்ளது தீபத்தூண் தான் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனை மீறி அதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் இறைவன் இருக்கிறான், அதனை உணர வேண்டும். தீபத்தூணில் விளக்கு ஏற்றலாம் என்று நீதிமன்றம் சொன்னதை பின்பற்றலாம் என்று நினைக்கிறேன். தமிழக அரசு இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. எந்தவித கலவரமும் வராமல் தடுத்துள்ளனர். ஒவ்வொரு அரசாங்கமும் தவறில் இருந்து தான் பாடம் கற்றுக்கொள்கிறது. அரசு தவறு செய்யும்போது நீதிமன்றம் தலையிட்டு நீதியை பெற்று தந்துள்ளது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஆன்மீக அரசியல் உலகம் முழுவதும் வளர்ந்துள்ளது என்ற கேள்விக்கு, உலக அளவில் இந்தியாவின் மதிப்பு பெருகி கொண்டே வருகிறது. நான் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளேன். முன்பு இருந்தது போல இப்போது இல்லை. இந்தியாவை கேட்டு முடிவு எடுக்கும் நிலையில் உலக நாடுகள் உள்ளன. GDPயில் இந்தியா ஜப்பானை முந்தி உள்ளது. இந்தியா வலிமையான நாடாக மாறி வருகிறது" என்றார்.

திமுகவின் நான்கரை வருட ஆட்சி எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த மகாவிஷ்ணு, "அரசாங்கத்தை குறை சொல்லும் அளவிற்கு நான் இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் ஜனநாயகத்தின்படி ஓட்டுரிமை உள்ளது. இவர்கள் இல்லை என்றால் அவர்கள், அவர்கள் இல்லை என்றால் இவர்கள், இவர்கள் 2 பேரும் இல்லை என்றால் புதிய ஒருவர் என்று தேர்வு செய்யும் வாய்ப்பு மக்களுக்கு உள்ளது. இந்த முறையும் அவர்களுக்கு வாய்ப்பு வர உள்ளது. மக்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்." என்றார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த மகாவிஷ்ணு, "இந்த உலகில் புதிதாக ஒன்றும் இல்லை. விஜய் புதிதாக ஒன்றும் பேசவில்லை. இன்னும் அதிகமாக அவர் பேச வேண்டும். விஜய்க்கு வேண்டுகோளாக ஒன்று வைக்கிறேன். ஒரு இடத்திற்கு அவர் வருகிறார் என்றால் லட்ச கணக்கில் மக்கள் வருகின்றனர். அது அவரின் உழைப்பிற்கு கிடைத்த பரிசு. தொண்டர்களை அரசியல்படுத்த வேண்டிய கட்டாயம் விஜய்க்கு உண்டு. உடன் இருப்பவர்களை விஜய் சரியாக வைத்து கொள்ள வேண்டும்.

ஒரு வருடத்தில் கட்சி தொடங்கி ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அரசியல் என்பது விளையாட்டு அல்ல. ரசிகர்களின் உயிரை நீங்கள் பணையம் வைக்கிறீர்கள். உங்களுக்காக அனைவரும் துடிக்கின்றனர். விஜய் இன்னும் துணிச்சலாக இருக்க வேண்டும். விஜய்க்கு தகுதி இல்லை என்று கூறவில்லை, இன்னும் கவனமாக இருந்தால் அடுத்தடுத்த நிலைக்கு போகலாம். தமிழ்நாடு அரசியலில் கடைசி வரை அறிக்கை மற்றும் பேச்சு மட்டுமே எடுபடாது.

அவருக்காக கூடிய கூட்டத்தில் கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது நடிகர் விஜய் களத்தில் நின்று ஹீரோ போல் பணியாற்றி இருக்க வேண்டும். அதை விடுத்து அவர் தப்பிச் சென்றது ஹீரோவுக்கான அழகு அல்ல, நடிகர் விஜய் தன்னுடன் இருப்பவர்களை கவனமாக கண்காணித்துக் கொள்ள வேண்டும். விஜய் இன்னும் துணிச்சலாக செயல்பட வேண்டும். உங்களை நம்பி வரும் ரசிர்களின் உயிரை பணயம் வைக்கிறீர்கள்." என்றார்.

மேலும் பேசிய அவர், "ராஜராஜ சோழன் குறித்து சமீபத்தில் சிலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற மிகப்பெரிய தமிழ் மற்றும் ஆன்மீக தொண்டாற்றியவர்களை பற்றி இன்றைய பொழுதுகளில் விமர்சனம் செய்யும் தகுதி யாருக்கும் இல்லை. தமிழக அரசு எனக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை. காவல்துறை அதிகாரிகள் எனக்கு உறுதுணையாக உள்ளனர் " எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+