சசிகலாவை ஒதுக்கி வைத்ததாக எடப்பாடி கோஷ்டி நாடகம்.. ஜெயக்குமார் கை தேர்ந்த நடிகர்.. மைத்ரேயன் சுளீர்
சென்னை; இரு அணிகளும் இணைவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோஷ்டி நாடகம் ஆடிவருவதாகவும், இதில் அமைச்சர் ஜெயக்குமார் நல்ல கை தேர்ந்த நடிகர் என்றும் ஓபிஎஸ் அணியில் உள்ள மைத்ரேயன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் தண்ணீர் பந்தலை ஓபிஎஸ் அணியில் உள்ள எம்பி மைத்ரேயன் இன்று திறந்து வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், யாருடன் கூட்டு வைப்பது என்பது குறித்து நிர்வாகிகளுடன் கூடி பேசி முடிவெடுக்கப்படும்.

சவால்
இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு, உள்ளாட்சி தேர்தலை நடத்த தைரியம் இருக்கிறதா? அதற்கான தேதியை அவர் அறிவிப்பாரா? நீதிமன்ற உத்தரவின்படி ஜுன் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நாடகம்
இரு அணிகள் சேருவதற்கு இரண்டே இரண்டு கோரிக்கைகள்தான். சசிகலா மற்றும் அவரது குடும்பம் கட்சியில் இருந்தும், ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும். இது தொடர்பாக அந்த அணியினர் நாடகம் ஆடுகிறார்கள்.

கை தேர்ந்த நடிகர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார் கை தேர்ந்த நல்ல நடிகர். முதல்வர் பழனிச்சாமியின் ஒப்புதலோடு அந்தக் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அறிவிக்கிறேன் என்று கூறினார். ஆனால் நேற்று கூட அந்த அணியில் உள்ளவர்கள் சசிகலாவை சந்தித்துள்ளனர்.

தவறான பாதை
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை எம்.எல்.ஏக்கள், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் நேரடியாக சென்று பார்த்திருக்கிறார்கள். எடப்பாடியின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் ஒருவர் போய் சசிகலாவை பார்த்து வருகிறார் என்றால் இது யாரை ஏமாற்ற போடும் நாடகம்? பெங்களூருவை நோக்கி செல்வது தவறான பாதை.

அணிவகுப்பு
இந்த நாடகத்தை அதிமுக தொண்டர்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். 95 சதவீத தொண்டர்கள் எங்கள் பின்னால் உள்ளனர். மீதி உள்ளவர்கள் அனைவரும் ஓபிஎஸ் தலைமையை ஏற்று வர வேண்டும். காலம் இதற்கு பதில் சொல்லும் என்று மைத்ரேயன் கூறினார்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications