இதயம் நிறைய அன்பால் நேசித்த முகுந்த்.. மனைவியின் உருக்கம்
சென்னை மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி தனது ஒரே மகளோடு வாழ்க்கையின் அடுத்து வரும் நாட்களுக்கு தனது மனதைத் திடப்படுத்திக் கொண்டு தயாராகி விட்டார். ஆனால் தன்னுடன் உயிரோடு உயிராக கலந்து போயிருந்த தனது கணவரின் இழப்பை அவரால் நிச்சயம் தாங்கிக் கொள்ள முடியாது, முடியவில்லை என்பது தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் போட்டுள்ள போஸ்ட் சாட்சியம் அளிக்கிறது.
மேஜர் முகுந்த் வரதரஜானின் காதல் மனைவி இந்து ரிபெக்கா வர்கீஸ். கேரளத்தைச் சேர்ந்த ரிபெக்கா, தனது கணவரின் வீர மரணத்தால் பெருமிதத்துடன்தான் இருக்கிறார். நாட்டுக்காக அவர் செய்த தியாகத்தால் அகமகிழ்ந்துதான் போயிருக்கிறார்.
ஆனால் ஒரு சாதாரண மனைவியாக, ஒரு குழந்தைக்குத் தாயாக அவர் தனது கணவரின் மரணத்தால் மனதளவில் உடைந்து போயிருக்கிறார். தான் முகுந்த் மீது வைத்திருந்த காதலை, அன்பை, பாசத்தை, நேசத்தை மிக எளிதாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் போட்டுள்ளார்.

அந்த உருக்கமான வரிகள்...
தன் இதயம் முழுக்க அன்பால் நிரப்பி நேசித்தார்
என் குழந்தைக்கு அன்பான தகப்பனாக வாழ்ந்தார்
ஒற்றுமையில் நம்பிக்கை கொண்ட நல்ல மனிதர்
தன் வேலையை நேசித்தவர்

தான் ஒரு ஹீரோ என்ற மமதை இல்லாதவர்
என் ஆத்மாவாக மாறிப் போனவர்
தாராள மனதுக்குச் சொந்தக்காரர்...
எல்லாவற்றையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் ...
தன் வாழ்க்கை முழுவதும் என்னை நேசித்தவர்
இன்று...நான் தனித்துக் காத்திருக்கிறேன்...
ஆனால்.. நான் அவரை ஒரு நாள் சந்திப்பேன்...
அன்று எப்போதும் எனக்குத் தரும் அந்த அன்புத் தழுவலை அப்போதும் அவர் கொடுப்பார்
மூச்சு விட முடியாமல் போனாலும்..
அந்த அன்புத் தழுவலிலிருந்து விடுபட மாட்டேன்...!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications