ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சிக்கு...: கி. வீரமணி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
டிசம்பர் 4-ம் தேதியன்று, ஏற்காடு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் அதிமுகவும், திமுகவும் களத்தில் இறங்கியுள்ளன. ஒரு இடைத்தேர்தலின் முடிவு ஆட்சியை மாற்றப் போவதில்லை; ஆனால், ஜனநாயகத்தின் முக்கிய தேவையான வாக்காளர்களின் மனநிலை எப்படி ஆட்சியின்பால் உள்ளது என்பதற்கான எடைமேடை அல்லவா?
எதிர்க்கட்சி என்று அறிவிக்கப்பட்டுள்ள கட்சியோ, தேசியக் கட்சிகள் என்பவைகளோ தேர்தலில் போட்டியிட்டு, ஆளுங்கட்சியின் பல்வேறு வசதி வாய்ப்புகளோடு ஈடுகொடுத்து போட்டி போட முடியாது என்று தயங்கி, பின்வாங்கிவிட்ட நிலையில் ஒதுங்கிக் கொண்டுவிட்டன. திமுக முன்வந்து களத்தில் துணிவுடன் இறங்கி தனது தேர்தல் பணிகளை எதிர்நீச்சலாக செய்து வருகிறது.
இந்த தேர்தலில் திமுகவை வெற்றி பெறச்செய்தால், ஆளுங்கட்சி சற்று ‘சுயபரிசோதனை' செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். திமுகவை வெற்றி பெறச் செய்வது திமுகவுக்காக மட்டுமல்ல; ஜனநாயகம் காக்க, தடம்புரளும் ஜனநாயகம் சற்று நிதானித்துத் தடத்தில் எஞ்சிய காலத்தில் பயணிக்க உதவியதாக அமையக்கூடும் என்பதால் கூறுகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications