பொய்ப் பித்தலாட்டத்தின் மொத்த உருவம் அதிமுக அரசு.. மக்கள் அதிகாரம் அமைப்பு
சென்னை: டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் மக்களை ஏமாற்றி, பொய் பித்தலாட்டம் செய்து வருகிறது என்று மக்கள் அதிகாரம் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா அரசுக்கு பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணமோ, அதற்கான விருப்பமோ கிடையாது. ஏனென்றால் கோடிக்கணக்கான ரூபாய் மது விற்பனையின் மூலம் வருவதை விடக் கூடாது. மேலும், மேலும் அதிகப்படியான நபர்களை குடிக்க வைப்பதன் மூலம், குடிகாரர்களாக மாற்றுவதன் மூலம் மக்களுக்கான எண்ணற்ற பிரச்சனைகளுக்காக போராடாமல் போலீசை வைத்து அடக்கி ஒடுக்கிவிடலாம். கோழைகளாக மாற்றிவிடலாம் என்று ஜெயலலிதா அரசு நம்புகிறது.

ஜெயலலிதா அரசாங்கம் பொய் பித்தலாட்டத்தின் மொத்த உருவம். ஒரு மக்கள் நல அரசு சட்டப்படியாக நடந்து கொள்வது. மக்களுக்கு உண்மையாக நேர்மையாக நடந்து கொள்வது என்பதை துளியும் அங்கு (அதிமுக அரசு) எதிர்பார்க்க முடியாது. பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவதும், ஆனால் பரோல் கேட்டால் கொடுக்க முடியாது என்று மறுப்பதும் இரண்டை நிலைப்பாடு.
முந்தைய தேர்தலில் நான் வெற்றி பெற்றால் ஈழம் வாங்கித் தருவேன் என்றார். இப்போது பூரண மதுவிலக்கு என்று சொல்லியிருக்கிறார். மது விலக்கு என்றால் பீகார் மாநிலத்தில் உள்ளதைப் போல தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார் அவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications