அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சேலம்: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருகிறது, கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது என்று திமுக பொருளாளரும் சட்டசபை எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அதிமுக அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூட அரசு முன்வரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் மக்கள் திமுகவை திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் தே.மு.தி.க.வினர் 25 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர். விழாவில் பேசிய வி.சி.சந்திரகுமார், தமிழகம் முழுவதும் மக்கள் தே.மு.தி.க.வை சேர்ந்த 25 ஆயிரம் பேர் இன்றைய தினம் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். தே.மு. தி.க.வில் உள்ளவர்களை தி.மு.க.விற்கு அழைப்பது எனது உரிமை என்று குறிப்பிட்டார். தி.மு.க.வில் இணைந்த மக்கள் தே.மு.தி.க.வினரை மு.க. ஸ்டாலின் வரவேற்று பேசினார்.

திமுகவின் மக்கள் பணி
கடந்த 67 ஆண்டுகளாக திமுக மக்கள் பணியாற்றி வருகிறது. ஆட்சியில்இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியை தி.மு.க. தொடர்ந்து செய்யும். தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை என்பதால் அரசியலை விட்டு ஒதுங்கவில்லை. திமுக ஆட்சியில் இருந்த போது தமிழக வளர்ச்சிக்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாதனை படைத்த தலைவர்
சேலம் உருக்காலை, பெரியார் பல்கலையை அமைத்தது திமுக ஆட்சிதான். 13 முறை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை படைத்த தலைவர் கலைஞர். சாதனைத் தலைவர் தலைமையிலான திமுகவில் இணைந்துள்ள மதேதிமுகவினரை வரவேற்கிறேன்.

ரத்த ஆறு ஓடுகிறது
திமுக ஆட்சிக்கு வரவில்லையே என நம்மைவிட வேதனைப்படுபவர்கள் பொதுமக்கள்தான். தமிழகம் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது. தினசரி கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து விட்டன. ஒரு போன் செய்தால் போதும் கூலிப்படையினர் வந்து வெட்டி சாய்த்து விடுகின்றனர் என்றார் ஸ்டாலின்.

ஒரே எதிர்கட்சி
என்ன நடந்தாலும் எந்தப்பிரச்சனையானாலும் சட்டசபையில் பேசாமால் வெளியே வரமாட்டோம். தற்போது தமிழக சட்டசபையில் ஒரே எதிர்க்கட்சியாக திமுக இடம் பெற்றுள்ளது.
நூற்றாண்டு கொண்ட திராவிட இயக்கம் மேலும் பல நூற்றாண்டு இருந்தாக வேண்டும். திமுக வை தொடங்கிய அண்ணா விட்டுச்சென்ற பணிகளை கலைஞர் நிறைவேற்றி வருகிறார். என்றும் ஸ்டாலின் கூறினார்.

மூடப்படாத மதுக்கடைகள்
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் வகையில், 500 கடைகளை முதல்கட்டமாக மூடியதாக சொல்லும் அதிமுக அரசு, கோவில்கள், மருத்துவமனைகள்,போக்குவரத்து நெரிசல் இருக்கக்கூடிய மதுக்கடைகளை இன்னும் மூடவில்லை.

பொதுமக்கள் போராட்டம்
மதுவிலக்கு போராட்டத்தின் போது காந்தியவாதி சசிபெருமாள் மரணமடைந்ததற்கு காரணமான, கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை பகுதியில் உள்ள மதுக்கடை இன்னும் மூடப்படவில்லை. மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,
அங்கிருக்கும் மதுக்கடைகளை அகற்ற மாநில அரசு முன்வரவில்லை என்றார்.

புதிய தொழிற்சாலைகள்
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து 2 மாதங்களாகியும் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் ஏதும் தொடங்கப்படவில்லை என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்றும் கடந்த 5 ஆண்டுகளாக 110 விதியின் கீழ் அறிவிப்புகள், ஆளுநர் உரையில் சொல்லப்பட்ட திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

25ஆயிரம் பேருக்கு உறுப்பினர் அட்டை
25 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைந்து கொண்டதற்கான உறுப்பினர் படிவங்களை மு.க.ஸ்டாலினிடம் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சந்திரகுமார்,எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் வழங்கினார்கள். அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications