அரசியலை விட்டு என்னை விரட்ட சதி நடக்கிறது: தீபா ஆவேசம்
சென்னை: அரசியலில் இருந்து என்னை விரட்ட சதி நடக்கிறது என்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயலாளர் ஜெ.தீபா கூறியுள்ளார்.
ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய பேரவையை தொடங்கினார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை என்று பெயர் வைத்து கொடியை அறிமுகம் செய்தார்.

இதையடுத்து பேரவைக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ததில் அவருக்கும் அவர் கணவர் மாதவனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஒன்றிய செயலாளர் பதவிக்கு 5 லட்சம் , மாவட்ட செயலாளர் பதவிக்கு 10 லட்சம் என்று வசூலித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து வெளியேறிய மாதவன், தனிக்கட்சியை துவங்கினார். இந்நிலையில் பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணியாற்றிய செலவு ஆகியவை மூலம் ரூ. 20 கோடி மோசடி செய்ததாக தீபா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் நெசப்பாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டுக்கு சென்ற போலீஸார் பண மோசடி குறித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தீபா கூறுகையில், புகார் அளித்தவர் யார் என்றே எனக்கு தெரியாது. போலீசார் என்னிடம் நேரடியாக விசராணை நடத்தவில்லை. தவறான புகாரின் பேரில் காவலர்கள் எனது வீட்டிற்கு வந்துள்ளனர். அரசியலை விட்டு என்னை விரட்டவே சதி நடக்கிறது. இந்த ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படவேண்டும். இவ்வாறு தீபா கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications