வேலைக்கு போகச் சொன்ன மனைவி: 2 மகன்களுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த கணவர்
வேலூர்: வேலூரில் மனைவி வேலைக்கு போகுமாறு கூறி கண்டித்ததால் ஒருவர் தனது 2 மகன்களுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள சென்றாயன்கோட்டையைச் சேர்ந்தவர் தண்டபாணி(30). அவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். தண்டபாணி டைல்ஸ் தொழில் செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்படவே அவருக்கு வருமானம் குறைந்தது. பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துவிட்டார்.
குடும்பத்தை நடத்த சரியான வருமானம் இல்லாமல் போனது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தண்டபாணி கடன் வாங்கி மது அருந்தி வந்துள்ளார்.
நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த அவருக்கும், மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. வேலைக்குப் போனால் என்ன என்று அவரது மனைவி கேட்டுள்ளார். உடனே தண்டபானி தனது மகன்கள் ரித்திக்(4), சேகர்(2) ஆகியோரை அழைத்துக் கொண்டு கீழ்ப்பட்டிக்கு சென்றார்.
வளத்தூர் கீழ்ப்பட்டிக்கு இடையிலான ரயில் பாதையில் குழந்தைகளுடன் காத்திருந்தார். சரக்கு ரயில் ஒன்று வருவதைப் பார்த்த அவர் மகன்களை ரயில் முன் வீசிவிட்டு தானும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து வேலூர் காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications