For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விழுப்புரம் ஆராயி மகனைக் கொன்ற கொலையாளி தில்லைநாதன் சைக்கோவா?

திருக்கோவிலூர் ஆராயி மகன் சமயனை கொன்ற கொலையாளி சைக்கோவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    சகோதரி, தாயார் படுகாயங்களுடன் மீட்பு!- வீடியோ

    விழுப்புரம்: வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆராயி மகன் சமயன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லைநாதன் மீது பல கொலை வழக்குகளும், பலாத்கார வழக்குகளும் உள்ளன. அவன் சைக்கோவாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆராயி தனது 10 வயது மகன் சமயன் மற்றும் 14 வயது மகள் தனத்துடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது கொடூரமாக தாக்கப்பட்டார். சிறுமியை பலாத்காரம் செய்த மர்மநபர், 10 வயது சிறுவன் சமயனைக் கொலை கொடூரமாக கழுத்தறுத்து கொன்றனர்.

    ஆராயி மற்றும் அவரது மகள் தனம் இருவரும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

    தில்லைநாதன் கைது

    தில்லைநாதன் கைது

    ஒருமாத கால தேடுதல் வேட்டையில் புவனகிரியை சேர்ந்த தில்லைநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 6 சவரன் நகைகள், 10க்கும் மேற்பட்ட செல்போன்கள், கொலைக்கு பயன்படுத்திய 2 இரும்பு ராடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தில்லைநாதனுக்கு உதவியதாக அம்பிகா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரையும் திருக்கோவிலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தியுள்ளனர்.

    சைக்கோ பாணி கொலை

    சைக்கோ பாணி கொலை

    கடலூர் மாவட்டம், மேல்புவனகிரி கள்ளிக்காட்டுத் தெருதான் தில்லைநாதனுக்குச் சொந்த ஊர். சிறுவயதில் அப்பா மரணமடையவே சைக்கோத்தனமாக பல வேலைகள் செய்துள்ளான். திருட்டு வழக்கில் சிக்கி சில தடவை சிறைக்குப் போன தில்லைநாதன் கடந்த 2010ஆம் ஆண்டு மட்டும், 33 சம்பவங்களில் 15 கொலையும் 18 பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்நிலைய கிரைம் ரெக்கார்டு கூறுகிறது.

    என்கவுண்டரில் தப்பியவன்

    என்கவுண்டரில் தப்பியவன்

    தில்லைநாதன் செய்த பல கொலைகளும் கொடூரபாணிதான். கடந்த 2010ஆம் ஆண்டு, நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டங்களில் ஒரே பாணியில் கொடூர கொலைகள், பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்தன. 2010ல் சைக்கோ தில்லைநாயகத்தை என்கவுண்டர் செய்ய போலீஸ் முடிவு செய்திருந்தது.

    உயிருக்கு போராடும் குடும்பம்

    உயிருக்கு போராடும் குடும்பம்

    திருச்சி சிறையில் இருந்த தில்லைநாதன், கடந்த 2016ஆம் ஆண்டு வெளியே வந்து மீண்டும் தனது பாணி திருட்டு, கொலைகளை தொடங்கி விட்டான் என்று விழுப்புரம், காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நள்ளிரவில் ஆராயி வீட்டிலிருந்த பணம் 9 ஆயிரம் ரூபாயை திருடிக்கொண்டு, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அவர்கள் சத்தம்போட முயன்றதும் இரும்பு ராடால் மூவரையும் தாக்கியுள்ளார். இதில் சிறுவன் சமயன் அதே இடத்தில் இறந்துள்ளான்.

    நகை பறிப்பு

    நகை பறிப்பு

    இதே கிராமத்தில் ஏற்கனவே நடைபெற்றுள்ள தாக்குதல் மற்றும் நகைபறிப்பு சம்பவத்தையும் இவரே செய்துள்ளதாக வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். 2016க்குப் பிறகு ஆராயி குடும்பத்தினர் மீதான தாக்குதல் உட்பட, மொத்தம் 11 சம்பவத்தில் தில்லைநாதன் ஈடுபட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் 5 சம்பவங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 சம்பவங்களும், கடலூர் மாவட்டத்தில் 1 சம்பவம் என மொத்தம் 11 சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

    உதவிய பெண்ணும் கைது

    உதவிய பெண்ணும் கைது

    இந்த சம்பவங்களில், கொள்ளையடித்த 6 பவுன் தங்க நகை, 11 செல்போன் மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்திய இரு இரண்டு ராடுகளையும் பறிமுதல் செய்துள்ளோம். இவருக்கு உதவியாக இருந்த புவனகிரியைச் சேர்ந்த அம்பிகா என்ற பெண்ணையும் கைது செய்து விசாரித்து வருவதாகவும் காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    English summary
    Police arrest Thillainathan in connection with the case the brutal attack on three members of a Dalit family in Vellamputhur, near Thirukoilur in Villupuram district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X