மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- போலீசாரால் கைது
தருமபுரி: தருமபுரியில் மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்துள்ள மூக்கனூர்பட்டியை சேர்ந்தவர் ஒருவருக்கு 14 பெண் குழந்தை ஒன்று உள்ளது. அப்பெண் மனநலம் பாதிக்கபட்டுள்ளதால் அவரை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்து பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரத்தில் அப்பெண்ணின் பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அப்போது, அச்சிறுமி கூச்சலிட்டதால் பயந்து அங்கிருந்து சத்தியமூர்த்தி அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுதொடர்பாக சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அரூர் மகளிர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
இதையடுத்து சத்தியமூர்த்தி தலைமறைவானார். இந்நிலையில், நேற்று அரூரிலிருந்து பேருந்தில் சென்று கொண்டிருந்த சத்தியமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications