சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு பீதி கிளப்பிய நபர் கைது
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் கடந்த 1-ந் தேதி கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. இதில் சுவாதி என்ற பெண் பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
செவ்வாய்கிழமையன்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசியவர் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் உள்ள கழிவறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
இதையடுத்து ரயில் நிலையத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் குண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையே போனில் பேசிய வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அவன் செல்போனில் பேசியிருந்தது தெரியவந்தது.
அவனது செல்போன் தற்போது எங்கிருக்கிறது என போலீசார் செல்போன் டவர் மூலம் கண்காணித்தனர். நேற்று இரவு சென்னை-புதுவை ஈ.சி.ஆர். சாலையில் வழி நெடுக உள்ள டவர்களில் அவனது செல்போன் பதிவானது.
இதையடுத்து அவன் புதுவைக்கு வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறான் என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். இதனால் ஈ.சி.ஆர். சாலையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், சோதனை சாவடிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை டோல்கேட்டில் சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த பஸ்சை சோதனையிட்டனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவன் அந்த பஸ்சில் பயணம் செய்வது தெரியவந்தது. அவனை உடனடியாக போலீசார் கைது செய்தனர். அவன் பெங்களூரை சேர்ந்தவன். பெயர் சிவக்குமார் (வயது 30) என்பது தெரியவந்துள்ளது.
அவனிடம் ஏராளமான சிம் கார்டுகளும் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சிவக்குமாரை விசாரணைக்காக போலீசார் சென்னை அழைத்து சென்றுள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications