காதலியின் 12 வயது மகளை பலாத்காரம் செய்த கள்ளக்காதலன் – போலீசால் கைது
கோவில்பட்டி: கோவில்பட்டியில் 7 ஆம் வகுப்பு மாணவியினை பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி பாரதி நகரை சேர்ந்தவர் இசக்கி தாய். இவரது மகள் லட்சுமி. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இவருக்கு ஒரு மகனும் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதால் இசக்கிதாய் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு தீக்குச்சி கம்பெனிக்கு இசக்கிதாய் வேலைக்கு சென்றார். அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த சிவகாசியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் இசக்கிதாய்க்கு பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசக்கி தாய் தனது குழந்தைகள் மற்றும் கள்ளக்காதலனுடன் மீண்டும் கோவில்பட்டியில் உள்ள பாரதியார் நகருக்கு குடிபெயர்ந்தார்.
இசக்கிதாயின் மகள் லட்சுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மணிகண்டன் கோவில்பட்டியில் உள்ள தனியார் டயர் கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
குடிப்பழக்கம் உடைய மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து இசக்கித்தாயுடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று மாலை வழக்கம் போல மணிகண்டன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை பார்த்த இசக்கிதாய் அவருடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
பள்ளி மாணவியான லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். திடீரென குடிபோதை தலைக்கேறிய மணிகண்டன் தனது கள்ளக்காதலியின் மகள் லட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கோவில்பட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து அப்பகுதியில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications