சென்னையில் காதலியை பிளேடால் அறுத்து கொல்ல முயன்ற காதலன் கைது
பல்லாவரத்தில் இளம் பெண் ஒருவரின் தலையை பிளேடால் அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: பல்லாவரத்தில் இளம் பெண்ணின் கழுத்தையும், தலையையும் பிளேடால் அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், பல்லாவரத்தில் விடுதியில் தங்கி பணி செய்து வந்தார். பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சத்யபிரகாஷ் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. சத்யபிரகாஷ் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.

தனது காதலி பிற ஆண்களுடன் பேசக்கூடாது என்று கட்டளையிட்டார் சத்யபிரகாஷ். ஆனால் அந்த பெண்ணோ, சகஜமாக அனைவரிடமும் பேசி வந்துள்ளார். இது சத்யபிரகாசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இருவருக்கும் மாறி மாறி சண்டை வரவே ஒரு கட்டத்தில் மோதலும் அதிகரித்தது. சில தினங்கள் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.
சமாதானம் பேசுவது போல பேசி காதலியை பல்லாவரம் பூங்காவிற்கு வரவழைத்தார் சத்யபிரகாஷ். நம்பி சென்ற இளம்பெண்ணிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. மீண்டும் கோபமாக பேசினார் சத்யபிரகாஷ். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, தனது கையில் வைத்திருந்த பிளேடை எடுத்து காதலியின் முகம், கழுத்து பகுதிகளில் அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் அந்த பெண்.
அக்கம் பக்கத்தினர் கூச்சல் போட்டதோடு போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம் பெண்ணை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சத்யபிரகாஷை கைது செய்ய போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஒருதலைக்காதல் கொலைகளும், காதல் முறிவினால் ஏற்படும் கொலைகளும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications