மனைவிக்கு பணி நிரந்தரம் கோரி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த கணவர்!

தனது மனைவியின் பணி நிரந்தரம் கோரி ஒருவர் மதுரையில் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த கணவர்!-வீடியோ

    மதுரை: தனது மனைவிக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருவர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தெப்பக்குளம் அருகே நிர்மலா பள்ளியை சேர்ந்தவர் ஜேசுராஜ். இவரது மனைவி ஜெஸிந்தா. இவர் அரசு உதவி பெறும் மதுரை நிர்மலா பள்ளியில் கடந்த 15 ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    Man attempts for suicide in Madurai Collectors office premises

    தனது மனைவி ஜெசிந்தாவிற்கு பணி நிரந்தரம் செய்ய கோரி பள்ளி நிர்வாகத்திடமும், மாவட்ட கல்வி அலுவலரிடமும் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

    இந்நிலையில், இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வந்த அவர், தனது மனைவி ஜெசிந்தாவிற்கு பின் பணியில் சேர்ந்தவர்களை பணி நிரந்தரம் செய்ததாகவும், தன் மனைவிக்கு நிரந்தர பணி வழங்குவதில் சாதி பாகுபாடு பார்ப்பதாகவும் இதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ குளிப்பில் ஈடுபட்டார். இதில் அவர் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார்.அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+