ஜெயலலிதா வீடு முன் தீக்குளிக்க முயற்சி... மணப்பாறையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் கைது
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு, அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீடு சென்னையில் போயஸ் கார்டனில் அமைந்துள்ளது. இன்று மதியம் முதல்வரின் வீடு அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த நபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விரைந்து செயல்பட்டு அவரது தற்கொலையை முயற்சியைத் தடுத்தனர். பின்னர் அந்நபர் கைது செய்யப்பட்டார்.
போலீசாரின் விசாரணையில் கைதுக்கு முயன்ற நபர், திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் மோகன் எனத் தெரியவந்தது.
மணப்பாறை கூட்டுறவுத்தலைவர் வெங்கடாச்சலம் பண மோசடி செய்ததால் மனமுடைந்த மோகன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மோகனிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications