நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த லேப் டெக்னிஷியனுக்கு எபோலா பாதிப்பா? மருத்துவமனையில் அனுமதி
சென்னை: நைஜுரியாவில் இருந்து சென்னை வந்த மெடிக்கல் லேப் டெக்னிஷியனுக்கு எபோலா தாக்கியுள்ளதா என்று அறிய சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அரியலூரைச் சேர்ந்த பாலமுருகன், ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டில் மெடிக்கல் லேப் டெக்னிஷியனாக வேலை பார்த்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்து பாலமுருகன் சொந்த ஊர் கிளம்பியுள்ளார்.
நைஜீரியாவில் இருந்து சென்னை புறப்பட்ட பாலமுருகனுக்கு வரும் வழியில் கடும் காய்ச்சல் காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் அதிகரித்து கொண்டே போனதால் எபோலா வைரஸ் பாதிப்பாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில் நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் உயிர்க்கொல்லி எபோலோ பரவி பல உயிர்களை காவு வாங்கியுள்ளதால் பாலமுருகனுக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே பாலமுருகனே தானாக முன்வந்து, சென்னை வந்திறங்கியதும், ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தன்னை எபோலோ சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து பாலமுருகனுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. சோதனை முடிவுகள் வெளியாகும்வரை தனி வார்டிலேயே பாலமுருகன் தங்க வைக்கப்படுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications