ஜாமீனில் வெளியே வந்தவர் நடுரோட்டில் துடிக்கத் துடிக்க வெட்டிக் கொலை: வீடியோ

சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர் நடுரோட்டில் துடிக்கத் துடிக்க வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: பழங்காநத்தம் பகுதியில் சிறையில் இருந்து வெளியே வந்த நபர் ஒருவர், நடுரோட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் கீழத்தெரு பகுதியில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த டவர் சரவணன். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Man hacked to death in Madurai

இந்நிலையில், அவர் ஜாமீனில் வெளியே வந்தார். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அவரை, மர்ம நபர்கள் சிலர் பின் தொடர்ந்து சென்று கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சுப்பிரமணியபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற கொலைக்கு பழிக்கு பழியாக சரவணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+