நெல்லை அருகே வியாபாரி வெட்டிக்கொலை: பதற்றம் - போலீஸ் குவிப்பு
நெல்லை: திருநெல்வேலி அருகே வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ராமர். விவசாயி. இவர் வியாபாரமும் செய்து வந்தார். இந்த நிலையில் இவர் மாலையில் அழகியபாண்டியபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரை அரிவாளால் சராமரியாக வெட்டினர். இதில் ராமர் படுகாயத்துடன் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். இதுகுறித்து மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து ராமரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலையான ராமரின் சகோதரி மகாலெட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மகாலெட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரித்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் சேகர் அவரது சகோதரர்கள் பெரியமாரி, சின்னமாரி ஆகியோர் சேர்ந்து ராமரை வெட்டி கொன்றது தெரிய வந்தது. இந்த கொலையால் அழகியபாண்டியபுரத்தில் பதட்டம் நிலவுகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications