பெண் போலீஸ் கான்ஸ்டபிளை கடத்தி பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது
தூத்துக்குடி: பெண் போலீஸ் கான்ஸ்டபிளை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்து அதை வீடியோ படம் எடுத்து மிரட்டி வந்த பலே ஆசாமி கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் நகரில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது. இதில் கான்ஸ்டபிளாக பணியாற்றிவருகிறார் 29 வயது பெண் ஒருவர். மகளிர் சார்ந்த பல்வேறு வழக்குகளை கையாண்ட அவருக்கு, கடந்த ஜூலை 19ம் தேதி கெட்ட நேரம் போலும்.
அன்றைய தினம், பணியை முடித்துக்கொண்டு கோவில்பட்டிக்குச் செல்வதற்காக கடம்பூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது கோவில்பட்டி தென்றல் நகரைச் சேர்ந்த மூக்கையா என்பவரின் மகன் சின்னராஜ் (40) அந்த வழியாக காரில் வந்துள்ளார்.
இவர் தூத்துக்குடி கூட்டுறவு கடன் சங்க செயலராக பணியாற்றி வருகிறார். அந்த காரை மறித்த பெண் போலீஸ்காரர், கோவில்பட்டியில் இறக்கிவிடுமாறு லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். காரில் சென்று கொண்டிருந்தபோது அவரிடம் பேச்சு கொடுத்து நெருக்கம் காட்டிய சின்னராஜ், காரில் இருந்த குளிர்பானத்தை பெண் போலீஸ்காரருக்கு கொடுத்துள்ளார். இதை குடித்த சில நிமிடங்களில் அந்த பெண் மயங்கியுள்ளார்.
பின்னர் காரை தனது வீட்டுக்கு திருப்பிய சின்னராஜ், அந்த பெண் போலீஸை வீட்டுக்குள் தூக்கிச் சென்று மயங்கிய நிலையில் இருந்தபோதே பலாத்காரம் செய்துள்ளார். அதையடுத்து தனது செல்போனை வைத்து, அந்த பெண்ணை ஆபாச படம் எடுத்துள்ளார் சின்னராஜ்.
மயக்கம் தெளிந்து எழுந்த பெண்ணிடம், நிர்வாண வீடியோக்களை போட்டு காண்பித்து, கூப்பிடும்போதெல்லாம் தனது ஆசைக்கு இணங்காவிட்டால் இந்த வீடியோவை வெளியே அம்பலப்படுத்துவேன் என்று எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார்.
, அவ்வப்போது, சின்னராஜ், பெண் போலீஸை போனில் அழைத்து உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார். பொறுத்து பார்த்த அந்த பெண் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பெண் போலீஸை காரில் கடத்தி ஆபாச படம் எடுத்து மிரட்டிய சின்னராஜை கைது செய்தனர்.
பலாத்காரத்துக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் படம் எடுக்க பயன்படுத்திய செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications